தரம் 9 மாணவர்களுக்கான விஞ்ஞானப்பாட நிகழ்நிலை பரீட்சை-3 இன்று ( 2021.11.30)  இரவு 8 மணி தொடக்கம் 8 30 வரையில் Online முறையில் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை எமது இணையதள ஏற்பாட்டாளர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.  பரீட்சைக்குரிய வினாக்களும், லின்கும் இரவு ஏழு முப்பது மணி அளவில் உங்களுக்கு வழங்கப்படும்.

ஏனைய பரீட்சை விபரம்

·    வியாழக்கிழமை தரம் 5 மாணவர்களுக்கான ஓன்லைன் பரீட்சை 

·    வெள்ளிக்கிழமை தரம் 4 மாணவர்களுக்கான புலமை பரிசில் 

·    சனிக்கிழமை தரம் 6 மாணவர்களுக்கான ஒன்லைன் பரீட்சை   

·    ஞாயிற்றுக்கிழமை தரம்7 மாணவர்களுக்கான ஒன்லைன் பரீட்சை 

·    திங்கட்கிழமை தரம் 8 மாணவர்களுக்கான ஒன்லைன் பரீட்சை 

·   செவ்வாய்க்கிழமை தரம் 9 மாணவர்களுக்கான ஒன்லைன் பரீட்சை

செய்கின்ற முறையை உங்களுக்கு தெளிவுபடுத்த இருந்தேன்.

    பரீட்சை வினாக்கள் இந்த வினாக்கொத்து இந்த போஸ்லே பிரசுரிக்கப்படும் . 20 வினாக்களை கொண்ட பல்தேர்வு வினாக்கள் ஆகும். நான்கு விடைகள் தரப்பட்டிருக்கும் அதிலே சரியான விடையை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும்.  விஞ்ஞானப்பாட பகுதி-1 புத்தகத்தில் இருந்து மாத்திரமே வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளது.   முதலில் வினாக்கள் உங்களுக்கு காட்சிப் படுத்தப்படுவதனால் அந்த வினாக்களை செய்து வேறு ஒரு தாளில் (கடதாசியில்செய்து விடைகளை குறித்துக்கொள்ளுங்கள்.  .  

                                                  உதாரணம்                                   1 – 3

                        2 – 4

                        3 – 1

                        4 - 2

மேலே கொடுக்கப்பட்ட இருப்பது போன்று 20 வினாக்களுக்கு விடைகளை தெரிவு செய்து கொள்ளுங்கள்.

 பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன google form   லிங்கை கிளிக் பண்ணினால் உங்களுக்கு இவ்வாறு ஒரு பகுதி காட்சி அளிக்கும்.




      இந்த பகுதியில் உங்கள்

                பெயர்

                பாடசாலையின் பெயர்

                வாட்ஸ்அப் இலக்கம்

                                      ஆகியவற்றை குறித்து நெக்ஸ்ட் பண்ணும்போது உங்களுக்கான விடை பேப்பர் அங்கே காணப்படும். அந்த விடைகளில் ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடைகளை டிக் செய்யவும்.

பின்னர் நீங்கள் அந்த வினாக்களை முடித்தவுடன் submit  பண்ணும்போது உங்களுக்குரிய புள்ளிகள் உங்களுக்கு திறையில் காட்சிப்படுத்தப்படும்.  எனவே இந்த விதிமுறைகளைப் பின்பற்றி பரீட்சைக்கு முகம்கொடுக்குமாறு உங்களை கேட்டுக்கொள்ளகிறோம்.

        

நிகழ்நிலை பரீட்சை-3

தரம் 9 

 விஞ்ஞானம்        பகுதி -1 






1) அமுக்கத்தின் அலகு என்ன

1) N                     2) Pa                   3) V                     4) J

2) தொகுதிப்பெருநாடி ஆரம்பிப்பது

1) வலது இதவறையில்              2)வலது சோணையறையில்

3) இடது இதயவறையில்           4) இடது சோணையறையில் 

3) தாவர முதிர்வடைவதை  தாமதிக்க செய்யும் ஓமோன்

1) ஓட்சின்                                       2) ஜிப்ரலின் 

3) சைறோகைனின்                    4) IAA

4) கூர்ப்பின் தந்தை என அழைக்கப்பட்டவர்

1) மோகன்                                2) டாவின்

3) நியூட்டன்                             4) தோமஸ் அல்வா எடிசன் 

5) வாழும் உயிர் சுவடு

1) வண்ணாத்திப்பூச்சி                      2) தும்பி

            3) தவளை                                         4) நுளம்பு

6) பின்வருவனவற்றுள் சர்வவாங்கி

1) A                                   2) B

3) AB                               4 ) O

7) பின்வருவனவற்றுள் பல்லினக்கலவை

1)பழச்சாறு                                2) கடல்நீர்

3) உப்புக் கரைசல்                      4) சீனி கரைசல் 

8) பின்வருவனவற்றுள் தொண்டையுடன் தொடர்புடைய பகுதி

1) செவிப்பறை மென்சவ்வு

2) நத்தைச்சுருள்

3) ஊத்தேக்கியாவின் குழாய்

4) அரைவட்ட கால்வாய் 

9) உயிரியல் நீர் முறையின் மூலம் பிரித்தெடுக்கப்படும் உலோகம்

1) நாகம்

2) செப்பு

3) சோடியம்

4) காபன் 

10) பின்வருவனவற்றுள் எது நுண்ணங்கி ஆகும் 

1) எரும்பு

2) நுளம்பு

           3) மதுவம் 

4) மண்புழு 

11)    Na    எனும் அணுவின் அணுவெண் 11 ஆகும். அதன் இலத்திரன்களின்                         எண்ணிக்கை யாது 

        1) 5                             2)  23     

        3) 6                             4)  11

12) கட்காசம் ஏற்படுவதற்கு காரணம்

1)  வடிந்தோடுதல்

2) அமுக்கம் அதிகரித்தல்

3)  கண்வில்லை ஆக்கப்பட்டுள்ள புரதம்  நார்தன்மையடைதல்

4) குளுகோசு மட்டம் கூடுதல்

13) டொல்பின் அசைவதற்கு பயன்படுத்துவது

1) துடுப்பு         2) சவுக்கும்

3) பிசிர்             4) தசை  

14) தொடுகை முன்னிலை அசைவைக்காட்டுவது

1) காசித்தும்பை                       2) மா

3) வெற்றிலை                           4)   தொட்டாசுருங்கி     

15) வாந்திபேதி நோயை ஏற்படுத்தக்கூடியது

1) பக்டீரியா                              2) பங்கஸ்

3) புரோட்டோசோவா               4) அல்காக்கள் 

16) வைரஸ் நோய் அல்லாதது 

            1) கோவிட்                   2) டெங்கு

 3) எபோலா                  4) மலேரியா   

17) உயிர் அங்கிகளின் தோற்றம் பற்றி எடுத்துக் காட்டக்கூடிய கூர்ப்புக் கொள்கை

1) சிறப்பு படைப்புகளை கொள்கை

2) தனிச்சிறப்பாக கொள்கை

3) உயிர் இரசாயன கூர்ப்புக் கொள்கை

4) அண்டவெளிக்  கொள்கை 

18) அணுவில் காணப்படுவது

1) இலத்திரன் மட்டும்

2) புரோத்திரன் மட்டும்

3) நியூத்திரன் மட்டும்

4) இலத்திரன் ,புரோத்தன் ,நியூத்திரன் ஆகிய மூன்றும் 

19) அமுக்கம் பற்றி சரியான கூற்று 

1) விசை அதிகரிக்கும்போது அமுக்கம் குறையும் 

2) விசை அதிகரிக்கும்போது அமுக்கம் அதிகரிக்கும்

3) பரப்பளவு அதிகரிக்கும்போது அமுக்கம் அதிகரிக்கும்

4) ஓர் அளவு பரப்பளவில் தாக்குகின்ற  திணிவு 

20) நைதரசனைப்பாதிக்கக்கூடியது நுண்ணங்கி

            1) மதுவம்                     2) அமீபா 

3) ரைசோபியம்             4) யூக்ளினா  


link இரவு 7.50 இற்கு இணைக்கப்படும்   https://forms.gle/NFBD2TtiRzxgJyvy8