ஐந்தாவது நிகழ்நிலை பரீட்சை விரைவில்
கடந்த வெள்ளிக்கிழமை தரம் 4 மாணவர்களுக்கான நான்காவது நிகழ்நிலை பரீட்சை நடைபெற்றது. அதில் 31ம் வினா தொடக்கம் 60 ம் வினா வரையிலான வினா இலக்கம் கொண்டதாக 30 வினாக்கள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறு புலமைப்பரிசில் பரீட்சையில் 31ம் வினா தொடக்கம் 60ம் வினா வரையிலான வினாக்கள் பல்தேர்வு வினாக்களாக அமையும். அதிலே மூன்று தேர்வுகள் வழங்கப்படும் அதில் ஒன்று மாத்திரமே சரியாக இருக்கும் அதற்கான பயிற்சிகள் தான் தற்போது உங்களுக்கு வழங்கப்படுகின்றது. சிலவேளைகளில் அறுபதாவது (60) வினா நீங்கள் வாக்கியங்கள் எழுதக்கூடியதாகவும் வரும்.
எமது நிகழ்நிலை பரீட்சை உங்கள் பாடசாலை நடவடிக்கைகளுக்கு எந்த விதத்திலும் இடையூறு ஏற்படாதவாறு நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். பாடசாலையில் ஆசிரியர் அல்லது ஆசிரியை வழங்குகின்ற சகல பயிற்சிகளையும் ஒழுங்காக மேற்கொள்வதுடன் மேலதிகமாக மாத்திரமே எமது நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபட வேண்டும். (ஸ்கூல் இஸ் பெஸ்ட்) தொடர்ச்சியாக எமது பரீட்சைகள் Giriulla Education Voice என்கின்ற இணையத்தளத்தினூடாக உங்களுக்கு வழங்கப்படும். அந்த இணையத்தளத்துக்கு பிரவேசித்து எதிர்கால பரீட்சைக்கூறிய link களை பெற்றுக் கொள்ளுமாறு உங்களை கேட்டு கொள்கிறோம்.
அன்பார்ந்த பெற்றோர்களே மாணவர்களை அடுத்த இவ்வாறான ஐந்தாவது நிகழ்நிலை பரீட்சை எதிர்வரும் 2021.12.03 ஆம் திகதி இரவு 7.30 மணி தொடக்கம் 8.10 வரையில் நடைபெற இருக்கின்றது. அதற்கு நீங்கள் தயாராக இருக்கவும் எமது இந்த இலவச சேவை தொடர்ச்சியாக நடைபெறும்.
ஆசிரியர் வழிகாட்டி கைநூலுக்கு அமைவாகவே எமது வினாக்கள் தயாரிக்கப்படும். என்பதால் எமது வினாக்களில் நீங்கள் பூரண நம்பிக்கை வைத்து செயல்பட முடியும். அந்த வினாக்களுக்கு உரிய விளக்கங்களை நீங்கள் தெளிவாகப்பார்த்துக் கொள்ளுமாறும் அந்த பரீட்சை வினாக்களில் பூரண விளக்கங்களை பெறுவதற்கான முயற்சிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஏனைய வகுப்பு மாணவர்களுக்கான பரீட்சைகள் இந்த இணையத்தளத்தில் பார்வையிட முடியும்
link 7.10 p.m. https://forms.gle/HoZFPxnH1QCGEa2W9
0 Comments