இன்று (2021.12.02) வியாழக்கிழமை வழமைபோன்று எமது Giriulla Education Voice இணையதளத்தின் ஊடாக வழங்கப்படுகின்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருதி நடத்தப்படுகின்ற நிகழ் நிலை பரீட்சை (ஒன்லைன் )- 5 ஏழு முப்பது தொடக்கம் எட்டு பத்து மணி வரையில் நடைபெறும்.
அதற்குரிய லிங்க் இதே போஸ்டில் கீழே கொடுக்கப்படும் . அந்த லிங்கை நாளை ஏழு பத்து மணி முதல் உங்களுக்கு பெற்றுக்கொள்ளமுடியும் . நடைபெற இருப்பது எமது ஐந்தாவது நிகழ் நிலை பரீட்சை (ஒன்லைன் ) இந்த பரிட்சைக்கு தோற்ற இருக்கின்ற மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது வினாக்கள் சகோதர சிங்கள மொழியில் இருந்து தொகுக்கப்பட்ட வினாக்களாக இருக்கலாம் அல்லாவிட்டால் கடந்த காலங்களில் புலமைப்பரிசில் பரீட்சையில் வழங்கப்பட்ட வினாக்களாக இருக்கலாம் எனவே இந்த வினாக்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் பாடசாலையின் வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் இந்த பரீட்சைகளுக்கு முகம் கொடுக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கின்றோம். எமது பரீட்சைகளுக்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் தோற்றுகின்றனர் எனவே அவர்களின் நலன் கருதி தான் உரிய நேரத்துக்கு இந்த பரிச்சை நடைபெறுகின்றது உரிய நேரத்துக்கு தோற்ற முடியாத மாணவர்களின் நலன் கருதி இந்த லிங்க் தொடர்ச்சியாக ஒரு மாத காலம் எமது இணையதளத்தில் காணப்படும். தேவையானவர்கள் தேவையான நேரத்தில் சென்று பரீட்சைக்கு தோற்றி உங்களது அறிவைப் பெருக்கிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இலவசமாக உங்களுக்கு வழங்கப்படுகின்ற இந்த சேவையில் நீங்கள் பயன் பெற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஏனைய பரீட்சை விபரம்
· வியாழக்கிழமை தரம் 5 மாணவர்களுக்கான ஓன்லைன் பரீட்சை
· வெள்ளிக்கிழமை தரம் 4 மாணவர்களுக்கான புலமை பரிசில்
· சனிக்கிழமை தரம் 6 மாணவர்களுக்கான ஒன்லைன் பரீட்சை
· ஞாயிற்றுக்கிழமை தரம்7 மாணவர்களுக்கான ஒன்லைன் பரீட்சை
· திங்கட்கிழமை தரம் 8 மாணவர்களுக்கான ஒன்லைன் பரீட்சை
· செவ்வாய்க்கிழமை தரம் 9 மாணவர்களுக்கான ஒன்லைன் பரீட்சை
link இரவு 7.10 இணைக்கப்படும்
https://forms.gle/e36CKmai7g1Anpuu9
0 Comments